
Read Time:1 Minute, 0 Second
தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?
விடை – கண் இமை
காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள்
விடை – மெட்டி
வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும்
விடை – வாழை
அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?
விடை – தலை வகிடு
வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?
விடை – மயில்
அறிவின் மறுபெயர், இரவில் வருவது
விடை – மதி
வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான்
விடை – உப்பு
வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
விடை – கத்தரிக்கோல்
தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்
விடை – இளநீர்
