
Read Time:57 Second
அடுத்த வாரம் திரையரங்கில் வெளிவரவிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க விஷால், எஸ்.ஜே. சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ரிது வர்மா, செல்வராகவன், சுனில் என பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
டைம் ட்ராவல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி பார்த்த நபரின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
