
Bigg Boss பிக்பாஸ் போட்ட கண்டிஷன்- டபுள் எவிக்ஷனா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Bigg Boss
பிக்பாஸ் 8, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், ரஞ்சித், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா என மொத்தம் 12 போட்டியாளர்கள் உள்ளனர்.
இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க போட்டிகள் மற்றும் சண்டைகள் என அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் நடந்த டாஸ்க்கில் முத்துகுமரன் விட்டுக் கொடுத்து விளையாடிய காரணத்தினால் நாமினேஷன் ப்ரி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது இந்த வாரம் மட்டுமல்லாமல் இந்த சீசன் முழுவதும் தொடரும் எனவும் கூறியுள்ளார். போட்டியாளர்களின் கவனக்குறைவு மற்றும் மோசமான நடத்தைகள் காரணமாக பிக்பாஸ் கடந்த ஏழு சீசன்களில் இல்லாதவாறு இந்த கண்டிஷனை போட்டுள்ளார்.
டபுள் எவிக்ஷன்
இந்த நிலையில், போட்டிகள் கடுமையாக இருக்கும் சமயத்தில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் எனக் கூறப்படுகின்றது.
இதன்படி, இந்த வாரம் மக்கள் வாக்குகள் அடிப்படையில், ரஞ்சித், ரயான், மஞ்சரி ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளார்கள். இவர்கள் குறைவான வாக்குகள் பெற்று இரண்டு போட்டியாளர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்.
ரயானுக்கு கொடுக்கப்பட்ட நாமினேஷன் ப்ரீ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதால் நிச்சயம் இந்த வாரம் வெளியேறுவார் எனக் கூறப்படுகின்றது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 20th Dec 24 – Promo 1