
Read Time:1 Minute, 12 Second
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: வைரலாகும் இன்ஸ்டா பதிவு
தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டனர்.
மேலும் இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தன் தந்தையை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், தனது மூத்த மகன் யாத்ராவின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
அதில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் “உன்னை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
