
Read Time:1 Minute, 9 Second
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள்.
புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு தேவநாத சாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
காலை 5 மணி முதல் பொதுமக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர்.
