
Read Time:1 Minute, 25 Second
பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?
விடை – மழை
நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்?
விடை – ரயில்
எடுக்க எடுக்க வளரும் எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும் அது என்ன?
விடை – முடி
அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான் அவன் யார்?
விடை – விறகு
தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி அவள் யார்?
விடை – ஒட்டகம்
ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
விடை – நெருப்பு
ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது அது என்ன?
விடை – செருப்பு
ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்
விடை – செருப்பு
கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம்
விடை – மேகம், மழை.
கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல
விடை – அம்பு
