
நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன?
விடை – தலையணை
எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
விடை – நண்டு
ஓய்வு எடுக்காமல் இயங்கும் ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது அது என்ன?
விடை – இதயம்
நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன் என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன் என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்?
விடை – நாளை
கிட்ட இருக்கும் பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவிலை
விடை – முதுகு.
கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு
விடை – சோற்றுப்பானை-சோறு.
வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை
விடை – தீக்குச்சி
அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள்
விடை – வெண்டைக்காய்
அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
விடை – முகம் பார்க்கும் கண்ணாடி
முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
விடை – நத்தை