விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்

0 0
Read Time:3 Minute, 44 Second

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்

ஒருவனுக்கு பக்தி வர வேண்டுமானால் கீழ் கண்ட ஏழு குணங்களும் சாதனங்களும் இருந்தாக வேண்டும்

தேக சுத்தி – உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும் உடம்பு சுத்தம் என்றால் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இல்லை ஆகார சுத்தம் வேண்டும் அதாவது சத்துவ குணங்கள் வளர்க்கும் உணவுகள்உட்கொள்ள வேண்டும் தமோ குணம் மற்றும் ரஜோ குணங்களை வளர்க்கும் உணவுகளை உட்கொண்டால் பக்தி வராது.

அதீத ஆசை கூடாது காண்பது, கேட்பது, உண்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் மிக அதிகமான ஆசை கூடாது.

அப்பியாசம் திரும்ப திரும்ப செய்யும் சக்தி, அதாவது பகவானின் திருமேனியை நினைத்து, நினைத்து மனதில் நிறுத்த வேண்டும். பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் போன்றவற்றை திரும்ப திரும்ப அலுப்பு தட்டாமல் படிக்கும் சக்தி, பெரியோர்களிடம் இவற்றை திரும்ப திரும்ப கேட்கும் சக்தி வேண்டும்.

கிரியா – கிரஹச்திணர் அனைவரும் பஞ்ச மஹா யக்கியம் தினமும் செய்ய வேண்டும் வீட்டில் பஞ்ச சோ சூனைகள் என்ற ஐந்து தோஷங்கள் உண்டு அம்மி, உரல் மற்றும் உலக்கை, ஜல பாத்திரம் விளக்குமாறு, அடுப்பு என்ற ஐந்து இடங்களிலும் தினமும் நம்மை அறியாமல் பிராணி வதை நடை பெரும் எனவே ஐந்து தோஷங்களால் பாவம் வந்து சேரும் அந்த பாபங்களில் இருந்து விடுபட பிரம்ம யக்கியம், தேவ யக்கியம் ரிஷி யக்கியம், மனுஷ யக்கியம் மற்றும் பூத யக்கியம் செய்ய வேண்டும் யக்கியம் என்றால் பெரிய காரியம் ஒன்றும் அல்ல. பூ சந்தனம் கொண்டு வழி பட்டாய் தேவ மற்றும் பிரம்ம யக்கியம் ஆகும் வேதம் சொன்னால் ரிஷி யக்கியம் ஆகும். விருந்தினரை உபசரித்தால் மனுஷ யக்கியம் ஆகும் மற்றும் வாசலுக்கு வரும் பிராணிக்கு உணவு இட்டால் பூத யக்கியம் ஆகும் இவற்றை தினமும் செய்ய வேண்டும்.

நல்ல குணங்கள் இருக்க வேண்டும் – அதாவது தயா இருக்க வேண்டும் இல்லாதவனை பார்த்தல் கொடுக்க வேண்டும் என்ற தயை வர வேண்டும் எப்போதும் சத்யம் சொல்ல வேண்டும்.

அதிக துன்பம் கூடாது தேச, கால மாறுபட்டினால் வருத்தப் படாமல் இருக்க வேண்டும் அதாவது வேறு இடம் சென்று விட்டால் அங்கு ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும் தட்ப வெப்ப மாறுபாட்டை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். தண்ணீர், ஆகார மாறுபாட்டினால் துன்பப்பட கூடாது.

அதிக மகிழ்ச்சி கூடாது – நமக்கு சுகம் தரும் விஷயங்கள் நடந்தாய் அதற்காக அதிக மகிழ்ச்சி கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்
Next post ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்தோத்ரம்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *