வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

0 0
Read Time:10 Minute, 37 Second

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

வெற்றிலை மிளகு குடும்பத்தை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகை ஆகும். பூர்வீகம் மலேசியா ஆகும். இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்,தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூடலூர் காவேரிக்கரையில் , நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் மற்றும் பொத்தனூர் பகுதியிலும், கரூர் மாவட்டம் புகழூர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு நல்ல வரவேற்பு உண்டு.

வகைகள்:

வெற்றிலையில் மூன்று வகைகள் உள்ளன.

கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.

கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர்.

கற்பூர. மணம் கொண்ட வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர்.

இந்த மூன்று வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பாக,கார்ப்புத்தன்மை உடையதாகும்.

பயிரிடும் முறை:

வெற்றிலை பயிருக்கு விதை என்று ஏதும் இல்லை.காம்புகளை வெட்டி பதியன் போட்டு தான் பயிர் செய்யப்படுகிறது.

வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்று பெயர். மிதமான தட்பவெப்பம், மண் வளம், தண்ணீர் வசதி உள்ள இடங்களில் வெற்றிலை பயிராகும்.

பயன்பாடுகள்:

கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை அவுன்ஸ் வீதம் மூன்று நாட்கள் குடித்து வந்தால், வாத பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறைக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம்,தலை பாரம், உணவு செரியாமை, மந்தம், குரல் கம்மல்,வயிற்று வலி,வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும்

இந்த வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும்போது தாம்பூலம் என்கிறோம். இந்தத் தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும்,நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும்.அப்பொழுதுதான் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் கிடைக்கும்.
அது மட்டுமின்றி, வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏனென்றால் பாக்கு துவர்ப்பு தன்மை கொண்டது.இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது.எனவே, ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல்,சொக்குதல், மூர்ச்சை ஆதல்,பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.

தாம்பூலம் உண்ணும் முறை:

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இவைகளை ஒன்றாக மெல்லும் போது, அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகும்,2-வது நீர் மிகு பைத்தியம் தருபவை யாகவும்,3-வது நீர் அமிர்தமாகவும்,4-வது நீர் அதி இனிப்பாகவும்,5,6-வது நீர் பித்தத்தோடும், அக்கினி மந்தம் ஆகியவற்றை உண்டாக்கும்.

இதனால் தான்,வெற்றிலை பாக்கு போடும் போது முதலிரண்டு நீர்களைத் துப்பிவிட வேண்டும். 3,4 வதாக சுரக்கும் நீரை விழுங்கி விட வேண்டும். ஐந்தாவது சுரக்கும் முன்பு வெற்றிலையைத் துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் தரிக்கும் முறையாகும்.

காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலச்சிக்கல் நீங்கும்.இரண்டுமுதல் நான்கு முறை பேதியாகும்.எனவே, மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கு அதிகமாகவும்,வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.

பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின் இவ்விதம் உண்டால் ஆரோக்கியமான பசி ஏற்படும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் , பாக்கு, சுண்ணாம்பு குறைவாகவும் மெல்லுவதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும். வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி, நல்ல

மணம் வீசும்.

இவ்வாறு நோய்க்கேற்றவாறு வெற்றிலை பாக்குகளை கூட்டிக் குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் குணமாகும்.

வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து,அதை மூக்கில் இரண்டு துளி விட தலைநோய், தலைபாரம், தலையில் நீர்த் தேக்கம் ஆகியவை நீங்கும்.

இரண்டு வெற்றிலையுடன் 50 கி ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.சிறுவர்களுக்கு மலச்சிக்கல் தீரும்.அதோடு இருமல், மூச்சுத் திணறல்,கோழைக்கட்டு நீங்குவதோடு,இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும், ஆண்கள் உண்டால் பெண்கள் மீது பற்றும் ஏற்படும்.

சத்துக்கள்:

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்து,3.1% புரதச்சத்து, 0.8% கொழுப்பு சத்து உள்ளது.மேலும், கால்சியம், கரோட்டின், தயமின்,ரிபோபிளேவின், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ,’சவிக்கால்'(Chavicol) என்னும் பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவ குணங்கள்:

சிறுநீர் பெருக்கி: வெற்றிலையை சாறாக்கி, அதில் பால் கலந்து குடித்தால் சிறுநீர் நன்றாக பிரியும்.சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.

சருமப் பராமரிப்பு: சருமத்தில் சொறி, தேமல், சிரங்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். சுத்தமான தேங்காய் எண்ணெயில் வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து எண்ணெய் சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, தினமும் சருமத்தின் மீது தடவி வந்தால் சொரி சிரங்கு படை போன்றவை குணமாகும்.

சளி

வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அகல் விளக்கில் சூடேற்றி இளஞ் சூட்டில் மார்பில் பற்று போட்டால் சளி குறையும். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இம்முறை பயன்படுகிறது.
வளரும் பிள்ளைகளுக்கு வெற்றிலை சாறுடன் சம அளவு துளசி இலையை சேர்த்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து 5 சொட்டு கொடுத்தால் சளி குறையும்.வெற்றிலையில் கடுகு எண்ணெய் தடவி மார்பில் தடவினால் இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

வயிற்றுக்கோளாறு: மலச்சிக்கல் இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வயதுக்கேற்ப 10–30 மிலி அளவு வெற்றிலைச்சாறு குடித்து வந்தால் , சரியாகும்.

தாய்ப்பால் சுரக்க: தாய்ப்பால் சுரப்பதில் குறைபாடு இருந்தால், மார்பகத்தில் பால் கட்டிக் கொண்டால்,வெற்றிலையை சூடுபடுத்தி மார்பின் மீது வைத்துக் கட்டலாம். வெற்றிலை இளஞ் சூடாக இருந்தால் போதும். தாய்ப்பால் சுரப்பு குறையும் போது வெற்றியிலையில் விளக்கெண்ணெய் தேய்த்து தணலில் சுட்டு மார்பகத்தில் கட்டி வந்தால் சுரப்பு அதிகரிக்கும்.
மார்பகப் புண், தீப்பட்ட இடங்களில், காயங்கள் இருக்கும் இடங்கள், மூட்டு வீக்கங்கள் ஆகியவற்றின் மீது வெற்றிலையை இடித்து வைத்துக் கட்டினால் உபாதை குறையும்.

வெற்றிலை சாப்பிடுவதற்கு மட்டுமின்றி மேற்கூறிய பிரச்சினைகள் சரி செய்யவும் உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரிசி கழுவிய நீரின் நன்மைகள்
Next post செம்பருத்தி பூவின் நன்மைகள்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *