
ஜாலியாக சைக்கிளிங்… அஜித் ஷாலினி
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த இவர் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
ஆனால் இந்த படம் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்ததால் படக்குழு் இப்படத்தை கைவிட்டுவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது தயாரிப்பாளர் விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக உருவாவதாக கூறியுள்ளார்.
கடந்த வாரங்களாக வெளிநாட்டில் பைக் சுற்றுலா செய்து வந்த அஜித், தற்போது சென்னை திருப்பினார். பின்பு தனது மனைவி மற்றும் சென்னையில் உள்ள பள்ளிக் குழுந்தைகளுடன் சைக்கிளிங் சென்றுள்ளார்.
சைக்கிளிங் சென்றபோது அஜித் அவரது காதல் மனைவி ஷாலினியுடன் எடுத்த கேண்டிட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
