அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 28

0 0
Read Time:1 Minute, 45 Second

அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு

விடை – முட்டை

ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான்

விடை – பம்பரம்

காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

விடை – முள்

ஆகாயத்தில் பறக்கும் அக்கம் பக்கம் போகாது அது என்ன?

விடை – கொடி

பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது

விடை – பாம்பு

ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல

விடை – சூரியன்

பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?

விடை – முருங்கைமரம்

என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன் நான் யார்?

விடை – துவாரம்

தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?

விடை – தொட்டா சுருங்கிச் செடி

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?

விடை – நிலா

பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும்

விடை – பெட்ரோல்

இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?

விடை – இதயம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 27
Next post பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஐ கலக்கப்போகும் இளம் வாரிசுகள்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *