
Read Time:1 Minute, 18 Second
வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?
விடை – விளக்கு
அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்
விடை – மிருதங்கம்
கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?
விடை – காலிங்பெல்
பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு
விடை – வானம்
ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும்
விடை – ரத்தம்
கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது
விடை – உளுந்து
மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
விடை – தீபம்
காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?
விடை – வானம்
உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?
விடை – தீக்குச்சி
ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர் அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி அது என்ன?
விடை – துத்தநாகம்
